மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் பேருந்து சேவைகளை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

- Advertisement -

பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் தனியார் பேருந்து சேவைகளை முறையாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி பேருந்து நேர அட்டவணையில் காணப்படும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயுமாறு தேசிய போகுவரத்து ஆணையகம்,  மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையகம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தினமும் இடம்பெறும் வீதி விபத்துகளில் குறைந்தளவு 7 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இவற்றில் பல விபத்துகளுக்கு தனியார் பேருந்துகளே காரணம் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக அவதானம் செலுத்தி விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தனியார் பாடசாலை பேருந்துகள் வேறு வர்ணத்தில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இதன்போது  வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாமையினால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்காக 3 இலட்சம் ரூபா கடன் வழங்குவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொலைதூர பேருந்துகள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் உணவகங்களின் தூய்மை குறித்தும் கனவம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று, பயணிகளின் வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கி உயர்தர பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz