மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பது குறித்து  கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

- Advertisement -

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பது குறித்து  கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்துயுள்ளார்.

அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

- Advertisement -

இந்தக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பிரதாய முறைகளில் இருந்து விலகி, அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களால் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஜானாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.பி.எம்.சந்தன உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz