மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி

- Advertisement -

பாதாள உலகக் குழு தலைவர்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களினால் சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நாட்டுக்குள் இடம்பெறுகின்ற பெரும்பாலான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதாக, தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்

இது தொடர்பில் மக்கள் மத்தியில் நீண்டகாலமாக உள்ள  அபிப்பிராயம் குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த நிலைமை சீர்திருத்தப்பட வேண்டும் எனவும், சிறைச்சாலைகளுக்குள் தொலைபேசி பயன்படுத்துகின்றமை முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலை மற்றும் பொலிஸ் துறைகள் பலவீனம் அடைவதன் மூலம், நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறைச்சாலை திணைக்களத்திற்குள் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊழல் மற்றும் செயற்திறனற்ற அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

Developed by: SEOGlitz