மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம்- உபுல் ரோஹன

- Advertisement -

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா  தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக  பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்ட நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ஐந்து  மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதன்மூலம் மக்கள் ஒன்றுகூடப்பட்டதாகவும் பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz