மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோர்ஜ் ப்ளோய்ட் கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்- வாசுதேவ நாணயக்கார

- Advertisement -

உலக நாடுகளே பாரிய தவறென ஏற்றுக்கொண்டுள்ள ஜோர்ஜ் ப்ளோய்ட் கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஜோர்ஜ் ப்ளோய்ட் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் அமெரிக்க பொலிஸார் செயற்ப்பட்ட விதம் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்த சந்தர்பம் வழங்கப்படவேண்டும். அனைத்து நாடுகளிலும் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும். நிராயுத நபர் ஒருவருக்கு கைகளில் விலங்கு இட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில். உலகத்தில் இதுவரை இடம்பெற்றிறாத ஒரு சம்பவமாக இது காணப்படுகின்றது. ஆகவே இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது என தெரியவில்லை. நீதிமன்ற தடைக்காரணமாகவே பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தினால் தடையுத்தரவு வழங்கப்பட்டதிலேயே தவறு உள்ளது.”

இதேவேளை, அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவை வழங்கியதே பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணமெனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“சர்வதேச ரீதியில் குற்றச்செயலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த விடயத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்த அனைவரும் அனுமதிவழங்கும் போது இலங்கையில் அதற்கு அனுமதி அளிக்காதது தவறானன ஒரு விடயமாகும். ஆனால் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும். போதிய சமூக இடைவெளியை பேணி, முகககவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவேண்டும். மக்கள் ஒன்று சேரும் இடங்களில் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றோம். அதனையே ஆர்ப்பாட்ம் இடம்பெற்றபோதும் செய்திருக்க வேண்டும். நீதிமன்ற தடையுத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கச்சென்றே பாரிய பிரச்சினை ஏற்பட்டது.   பொலிஸாரின் செயற்பாடு  அவசியமற்ற ஒன்று. மற்றுமொரு பக்கம் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் பொலிஸாருக்கு உண்டு. அவ்வாறு செயற்படும் போதும் பிரச்சினை ஏற்படும். மேலும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அரசாங்கத்தினால் கொண்டுள்ள கொள்கைதொடர்பில் பார்க்கும் போது அது பிரச்சினையாகவே அமைந்துள்ளது. ஆனால் இதில் பொலிஸார் மீது தவறுள்ளதாக கூறமுடியாது. நீதிமன்ற தடையுத்தரவிலேயே தவறு உள்ளது.”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் இந்த ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். கடந்த...

சில மாகாணங்களில் பலத்த மழை – சற்று முன்னர் வெளியான அறிக்கை…!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...

சுற்றுலா இடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன…!

அனைத்து சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், முகாம்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை அடிப்படையாக கொண்டே இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் கோர விபத்து – பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வேககட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

பாடசாலைகளை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்..!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு, இன்றைய தினம் வரையில் பாடசாலைகளை மூடுவதற்கு...

Developed by: SEOGlitz