முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பன்றி வளர்ப்பை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வண்ணாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் கடற்கரையோரமாக மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ள நபருக்கு எதிராகவே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிக்கு அருகாமையில் இந்த பன்றி வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதனால் பண்டிக்கு கொண்டு வரப்படுகின்ற கழிவு உணவுகள் அங்கே கொட்டப்பட்டு துர்நாற்றம் காரணமாக வீடுகளில் உள்ள சிறுவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் நோய்த்தொற்றலுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபையினருக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சுகாதார பிரிவு ஊழியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.