பொகவந்தலாவை இரானிகாடு மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட திரவிய பட்டைகளோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இரானிகாடு கிழ்பிரிவு தோட்டபகுதியில் நடாத்தப்பட்ட சோதனைக்கமயவை குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, 127 கிலோ கிராம் நிறையுடைய வாசனை திரவிய பட்டைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த வாசனை திரவிய பட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்ததாக, முதற்கட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது .
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.