மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல மாகாணசபைத் தேர்தலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தான் நடாத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல மாகாணசபைத் தேர்தலும் கொரோனா  வைரஸ் பரவலுக்கு மத்தியில்தான் நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் தேர்தல்கள் ஆணைக்குழுவை கேள்விக்குட்படுத்துகின்றனர்.  சுகாதார பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது. தொடர்ந்து தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை  ஒத்திவைப்பதற்கான எந்தவொரு அவசியமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை. நாம் தற்போது தேர்தலை நடாத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். சுகாதா ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால்  கடந்த காலங்களை விடவும் இந்த முறை  தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை முன்னெடுப்பதற்கு அதிக காலங்கள் தேவைப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல அதற்குப் பின்னர் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலும் இந்த கொவிட் – 19  வைரஸ் பரவலுக்கு மத்தியில்தான் நடாத்தப்படுமென நாம் நம்புகின்றோம். 2021 ஆம் ஆண்டு இறுதி வரை நாம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில்தான் வாழவேண்டிய நிலை உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

Developed by: SEOGlitz