மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க உறுப்புரிமை நீக்கப்பட்ட வழக்கு விவகாரம்- வாய்மூல சமர்ப்பணங்களுக்கு திகதி நிர்ணயம்.

- Advertisement -

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரின் கட்சி உறுப்புரிமை  நீக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு மீதான வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாய்மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி முன்வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

- Advertisement -

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மனு கொழும்பு மாவட்ட நீதிபதி அமாலி ரணவீர முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே, இவ்வாறு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்தவித விசாரணைகளும் இன்றி தான் உள்ளிட்ட இன்னும் பல உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் குறித்த தீர்மானத்திற்கு தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள 99 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதாக ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து...

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 363 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளமை...

Developed by: SEOGlitz