மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இட்டுகம’ கொவிட் -19 ஜனாதிபதி நிதியத்தின் இருப்பு 137 கோடியை கடந்தது

- Advertisement -

‘இட்டுகம’ எனப்படும் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 137 கோடி 45 இலட்சத்து 75 ஆயிரத்து 493 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகளுடன் நிதியத்தின் வங்கி கணக்கில் இடப்பட்ட நேரடி வைப்புகளுடன் இந்த தொகை எட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் 14 மில்லியன் ரூபாவும், ஊவா மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் 11 மில்லியன் ரூபாவும், தென் மாகாண அரச அதிகாரிகளினால் 20 மில்லியன் ரூபாவும் இந்த நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வட மாகாண அரச அதிகாரிகளினால் 3 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாண அரச மற்றும் அரச சார்பற்ற தரப்பினரால் 40 மில்லியன் ரூபாவும், மேல் மாகாண அரச அதிகாரிகளினால் 20 மில்லியன் ரூபாவும்  இந்த நிதியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘இட்டுகம’ இணையத்தளத்தின் ஊடாக 17 இலட்சத்து 86 ஆயிரத்து 50 ரூபா இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘இட்டுகம’ எனப்படும் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு பங்களிக்க விரும்புவோர், www.itukama.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக அல்லது கைத் தொலைபேசியினூடாக #207# எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக தமது பங்களிப்பை வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இட்டுகம' கொவிட் -19 ஜனாதிபதி நிதியத்தின் இருப்பு 137 கோடியை கடந்தது 1

'இட்டுகம' கொவிட் -19 ஜனாதிபதி நிதியத்தின் இருப்பு 137 கோடியை கடந்தது 2

'இட்டுகம' கொவிட் -19 ஜனாதிபதி நிதியத்தின் இருப்பு 137 கோடியை கடந்தது 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் – ரொஷான் ரணசிங்க உறுதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கூட்டு முடிவொன்று மேற்கொள்ளப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள்...

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை 729,000 ஐ கடந்தது

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால்...

மியன்மாரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனநாயகத்தைப்...

இலங்கைக்கு எதிரான T20 தொடரை வசப்படுத்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளின் Antigua வில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

கொரோனா தொற்றினால் 7 வாரங்களான குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 7 வாரங்களான பெண் குழந்தையொன்று கொரோனா தொற்றுகாரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர...

Developed by: SEOGlitz