ஆயுத போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராளிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் விடயம் முரண்பாடான ஒரு விடயமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளை தமிழரசுக் கட்சியில் இணைத்துக்கொள்ளும் விடயம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அத்துடன், இதுவரை தமிழரசுக் கட்சி, தமது அரசியல் செயற்பாடுகளின் மூலம் ஒரு அரசியல் கைதியையேனும் விடுவித்துள்ளதாக தரவுகள் இல்லையெனவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.”
“இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் தற்போதைய செயற்பாடுகள், போராளிகள் குறித்த அக்கறை மற்றும் தமிழ் மக்கள் மீதான கரிசனைகள் என்பன தேர்தலை இலக்குவைத்த நடவடிக்கைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.”