நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க தூதரக அலுவலர் ஒருவர் அண்மையில் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அமெரிக்க தூதரக அலுவலர் சர்வதேச நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகவே நடந்துகொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.