கம்பஹா காலி ஹம்பாந்தோட்டை மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் நீர்கொழும்பு கல்பிட்டிய கொடபொல லுனுகம்வெஹர ரத்தோட்டை திம்புலாகல ஆகிய பிரதேசங்களிலும் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் , மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் ஒத்திகை திட்டம் கடந்த 7 ஆம் திகதி அம்பலாங்கொடை பகுதியில் முன்னெடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.