- Advertisement -
மிரிஹான பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 53 வயதான நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சுய தொழில் தொழிற்சங்கத்தின் முச்சக்கரவண்டி சங்கத்தலைவர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.