கல்கிஸ்ஸை சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின்போது, பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.