இலங்கைக்கு தமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக, இலங்கைக்கான மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவிவரும் சூழ்நிலையில், இலங்கை மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் ஆதரவளித்த, மத்திய கிழக்கு அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் அப்துல்நாசர் எச். அல் ஹார்தி, குவைத்தின் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர், எகிப்தின் தூதுவர் ஹூசைன் எல் சஹார்டி, பலஸ்தீன அரசின் தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரக விடயங்களுக்கான பொறுப்பாளர் ஹூமைட் அல் தமீமி, கட்டாரின் ஹமாத் அல் புவைனைன், ஈராக்கின் குதைபா அஹமட் அல்கெரோ மற்றும் லிபியாவின் அமைச்சர் அமர் ஏ.எம். முப்ஃதா ஆகிய தூதுவர்களும், தூதரகங்களின் தலைவர்களும், இந்தக் கலந்துரையாடலின்போது கலந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாரிய அளவிலான இலங்கையர்கள், மத்திய கிழக்கில் பணிபுரிந்து வரும் நிலையில், குறித்த இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது தனது பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது..