மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடஉல்பத – ஹதமுணகால பிரதேசத்தில் சக்திவாய்ந்த மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது 33 ஆயிரம் வோல்ட் சக்தி வாய்ந்த மின்கம்பி ஒன்று வீழ்ந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அருகில் உள்ள பலா மரத்தின் கிளை மின் கம்பி மீது வீழ்ந்த நிலையில், மின் கம்பி லொறி மீது வீழ்ந்து அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் லொறியினுள் மூவர் இருந்துள்ளதுடன், ஒருவர் லொறியில் இருந்து வெளியில் பாய்ந்ததன் காரணமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தில் செலகம மற்றும் மஹவெல பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மஹவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.