மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்வு

- Advertisement -

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட ஊடக அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட குறித்த ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும்.

ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாகந்துர மதுஷ் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்தொகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்...

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

Developed by: SEOGlitz