மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது கட்சியினர் மீதான பொலிஸாரின் தாக்குதல் குண்டர் தாக்குதலாகும்-முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு

- Advertisement -

தமது கட்சியினருக்கு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினரால் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த முறைப்பாடு இன்றைய தினம் பதிவு செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

- Advertisement -

முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், முன்னிலை சோசலி கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

கடந்த ஒன்பதாம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் நகர மண்டபத்திற்கு அருகாமையில் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகவுறைகள் மற்றும் கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தி சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கே பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி தாக்குதல் மேற்கொண்டனர்.அதேபோன்று பொலிஸ் நிலையத்தின் சில அதிகாரிகளை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியதாக கூறியிருக்கின்றார்கள்.ஆனால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலரை மாத்திரம் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி பயனில்லை.அது குணடர் தாக்குதல் மாத்திரமன்றி கடத்தல் செயற்பாடாகும்.குறித்த தாக்குதல் கைது செய்வதற்கும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படவில்லை.கட்டைகளை வைத்து நடத்திய அந்தத் தாக்குதல் குண்டர் தாக்குதல் மாத்திரமன்றி கடத்தல் செயற்பாடாகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz