மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2369 ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2 ஆயிரத்து 369 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள  அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

இந்த நிலையில், மே மாதத்தில் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் 665 பேரும், பெப்ரவரி மாதத்தில் 454 பேரும், மார்ச் மாதத்தில் 206 பேரும், ஏப்ரல் மாதத்தில் 132 பேரும் மே மாதத்தில் தொள்ளாயிரத்து 12 பேரும், எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட ரீதியான தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக அளவிலானோர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 624 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 273 பேரும், காலி மாவட்டத்தில் 201 பேரும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சலினால் கடந்த வருடத்தில் 6 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 245 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 677 பேரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz