மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 1490 பேர் கைது

- Advertisement -

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் 498 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலகட்டம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில்  70 ஆயிரத்து  42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 19 ஆயிரத்து  856 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுள் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரத்து 892 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz