மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவன்கார்ட் கப்பல் பணியாளர்கள் 117 பேர் நாட்டிற்கு வருகை

- Advertisement -

அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் பணியும் பணியாளர்களை இடைமாற்றம் செய்வதற்காக இந்தியர்கள் உள்ளிட்ட 117 வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் இந்தியாவிலிருந்து வருகை தந்த விசேட விமானமொன்றின் ஊடாக அழைத்து வரப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் மும்பை நகரில் இருந்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான, SG 9069 எனும் இலக்க விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 8.30க்கு இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த பின்னர், PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் பணியும் பணியாளர்களை இடைமாற்றம் செய்வதற்காக, கடந்த 6ஆம் திகதி விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz