- Advertisement -
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிரசார பதாதைகள் அடையாளம் தெரியாத நபர்களால் தீமூட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரசார பதாதைகளே இவ்வாறு தீமூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.