மாகாண சபைகள் ஜனாதிபதிக்குக் கீழ் இயங்கும் நிலையை ஏற்படுத்தியதில், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பெரும் பங்கு இருப்பதாக, வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை தட்டிக்கேட்காது முழுமையான ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தற்போது நீதிமன்றம் சென்றதில் பயன் எதுவும் இல்லையெனவும், வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.