மெய்ப்பொருள் காண்பது அறிவு

முன்னிலை சோசலிச கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தடை

- Advertisement -

முன்னிலை சோசலிச கட்சியினால் கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக அல்லது அதற்கு அருகில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் கட்டளை சட்டத்தின் 106 கீழ் ஒன்று சரத்தின் பிரகாரம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொல்லுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுதிப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்க மற்றும் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் பொது மக்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில், உத்தரவை மீறி செயற்படும் பட்சத்தில், தண்டனை சட்டக் கோவையின் 185 சரத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்கம், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக அனுர குமார குற்றச்சாட்டு!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்தல் என்ற போர்வையில், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளையே மேற்கொள்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும்...

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Developed by: SEOGlitz