மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி மாவட்டத்திலும் வெட்டுக்கிளித் தாக்கம்?

- Advertisement -

கிளிநொச்சி மாவட்டத்திலும் வெட்டுக்கிளித் தாக்கம் ஏற்படலாம் என அப்பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெட்டுக்கிளியின் தாக்கம் வடக்கிலும் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நிலங்களில் கண்காணிப்பில் உள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் சில வெட்டுக்கிளிகளின் பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதயில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே குறித்த வெட்டுக்கிளி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வெட்டுக்கிளி போன்று பல குறித்த பகுதியில் காணப்படுவதாகவும், இன்று காலை விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சில வெட்டுக்கிளிகள் பறந்து சென்றதாகவும், மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் ஒன்றை தான் பிடித்துள்ளதாகவும் குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.

எனினும் தமது பிரதேசங்களின் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் சாத்தியம் ஏற்படின் பாரிய சவால்களிற்கு விவசாயிகள் முகம் கொடுக்க நேரிடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே குறித்த பாதிப்புக்களிற்கு முகம் கொடுக்கும் வகையிலும், பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக நாம் கிளிநொச்சி பிராந்திய விவசாயத் திணைக்கள அதிகாரி த.அரசகேசரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அவ்வாறான தாக்கம் எதுவும் இதுவரை இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த வெட்டுக்கிளிகள் வழமையாக அப்பிரதேசத்திற்குரிய இனத்திற்குரியவை ஆகும்.
அவை இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ பரவல் அடைய இல்லை.

அவ்வாறு பரவல் அடைந்தாலும் அவை மிகச்சிறிய அளவில் காணப்படமாட்டாது.
ஏனெனில் அவை பரவலடையுமாக இருந்தால் அது பல மில்லியன் கணக்கான எண்ணிக்கையிலேயே காணப்படும்.

எனவே தற்போதுவரை வெட்டுக்கிளிகளின் தாக்கம் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில் அடையாளம் காணப்படவில்லை.

எனினும் குறித்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அசாதாரணமான எண்ணிக்கையாகக் காணப்பட்டால் உடனடியாக விவசாயத்திணைக்களத்திற்கு உடனடியாக மக்கள் அறிவிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் வெட்டுக்கிளித் தாக்கம்? 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

கண்டி பூவெலிக்கடை கட்டட விவகாரம்: உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி!

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...

Developed by: SEOGlitz