மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன் விடுத்துள்ள தகவல்

- Advertisement -

நாட்டை அண்மித்த பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைக்காரணமாக தென்மேற்கு பிராந்தியத்தில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக்கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு மேலாக காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்பங்களில் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மை பாதுக்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

மண் சரிவு அபாயம் – விசேட எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 09 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி, இந்த எச்சரிக்கை நாளை மாலை 6.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட...

Developed by: SEOGlitz