பிரதமரினால் அழைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, குறித்த கலந்துரையாடலில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.