மெய்ப்பொருள் காண்பது அறிவு

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்  நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 304 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  இரண்டு  விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள்  இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கமைய  இந்தியாவின் மும்பை நகரில்  இருந்து  18 இலங்கையர்களுடன் பயணித்த U L 1042 எனும் விமானம் இன்று அதிகாலை  4.45 அளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து  286 இலங்கையர்களுடன் பயணித்த U L   605 எனும் விமானம் இன்று அதிகாலை 5.50 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அனைவருக்கும் விமானப் படையினரால் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  விமானநிலைய சுகாதார பணியாளர்களினால் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த 304  இலங்கையர்களும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...