மெய்ப்பொருள் காண்பது அறிவு

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

- Advertisement -

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், அலுவலக மற்றும் ஏனைய சேவைகளுக்காக இன்றைய தினம் கொழும்பு நோக்கி 27 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிரதான ரயிர் மார்க்கங்களில் 10 ரயில்களும், கரையோர ரயில்மார்க்கமாக 09 ரயில்களும், புத்தளம் ரயில் மார்க்கத்தில் இரண்டும், களணி ரயில் மார்க்கத்தில் 05 ரயில்களும் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் ஒரு ரயிலும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெலியத்த மற்றும் கண்டியிலிருந்து நகர கடுகதி ரயில்கள் இரண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோ சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ரயில் புறப்படுவதற்கு குறைபந்தபட்சம் அரை மணித்தியாலத்திற்கு முன்னர் ரயில் நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம், பதிவு செய்தல், கைகளை சுத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஸ் போக்குவரத்து அதிகாலை 4.30 முதல் பிற்பகல் 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே பயணக் கட்டணத்தை அறவிட முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

பஸ்களில், பஸ்ஸின் இறுதி நிறுத்தம் தௌிவாக முன் கண்ணாடியில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு இணங்க அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் முச்சக்கர வண்டிகள் மற்றும் கூலி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முச்சக்கர வண்டிகளில் சாரதி தவிர இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்பதுடன், கார்களில் சாரதி தவிர மூன்று பேருக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz