மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேஷியாவில் சிக்கியுள்ள இலங்கை மீனவர்களை மீட்பதற்கான விசேட கப்பல் இன்று பயணம்!

- Advertisement -

இந்தோனேஷிய கடற்பிராந்தியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மீனவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பலொன்று இன்று இந்தோனேஷியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை   எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

- Advertisement -

ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 30 படகுகளில் சுமார் 180 மீனவர்கள்   ஆழ்கடல் கடற்பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போது நாட்டை அண்மித்த கடற்பிராந்தியத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிக்குண்ட மீனவ படகுகள் இந்தோனேசியா கடல் பிராந்தியத்தில் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீனவர்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவையின் தலைமைத்துவ பலவீனமே தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியது : சிவகரன்!

மாவை சேனாதிராஜாவினுடைய தலைமைத்துவ பலவீனமே இன்று தேர்தலில் பாரிய தாக்க நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமர்வு ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...