மெய்ப்பொருள் காண்பது அறிவு

குவைத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 19000 இலங்கைத் தொழிலாளர்கள்!

- Advertisement -

குவைத்தில் சுமார் 19 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதுடன், அவர்கள் நாடு திரும்புவதற்காக குவைத் அரசாங்கம் பொதுமன்னிப்புக் காலத்தை வழங்கியுள்ளது.

இந்த பொதுமன்னிப்புக் காலத்தை பயன்படுத்தி குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கி இவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

- Advertisement -

இதன் அடிப்படையில், முதற்கட்டமாக குவைத் நாட்டில் இருந்து 287 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

KU 1451 எனும் இலக்கம் கொண்ட குவைத் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று மாலை 6.50க்கு இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன், இரண்டாம் கட்டமாக மேலும் 179 இலங்கையர்கள், விசேட விமானம் மூலம் நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

KU 1453 எனும் இலக்கம் கொண்ட குவைத் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன், குவைத்தில் இருந்து வந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில், அவசியமான தேவைகள் தவிர்ந்த நோக்கங்களுக்காக நாடு திரும்புவது குறித்து சிந்தித்து செயற்படுமாறு வெளிநாடுவாழ் இலங்கையர்களிடம் வெளியுறவு அமைச்சு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

நாடு திரும்புவதற்காக வெளியுறவு அமைச்சிடம் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள 38ஆயிரம் பேரில் 28 ஆயிரம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்களில் குறிப்பாக, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னுரிமை அளித்து செயற்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்றும் மனுக்கள் பரிசீலணை!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த...

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...