மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

- Advertisement -

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 23 பேர்உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 279 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 138 பேர், தெரிவுசெய்யப்பட்ட 23 பாதுகாப்பான இடங்களில் தற்கவைக்க்படப்டுள்ளனர்.

கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும், 586 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 101 குடும்பங்களை சேர்ந்த 450 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 55 குடும்பங்களை சேர்ந்த 265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 261 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...