மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொட்டகலை, லொக்கீல் பகுதியில் வெள்ளம் – 180 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

- Advertisement -

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன.

- Advertisement -

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடமொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை கொட்டகலை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

அத்துடன், வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வகையில் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வடி கான்கள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!

2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz