மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 2709 பேர் கைது!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக  அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் இரண்டாயிரத்து 709  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும்  946   வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

- Advertisement -

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான  24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் மாதம் 20 ஆம் திகதி  மாலை 6 மணிதொடக்கம்  இன்று காலை 6 மணிவரையான  காலப்பகுதிக்குள்  ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டமை  தொடர்பில்  59 ஆயிரத்து  35  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 ஆயிரத்து  436 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் 15 ஆயிரத்து 695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஐயாயிரத்து 660 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்…!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது..!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியக்கொடை கொரோனா...

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

பசறையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இவர்கள் கொழும்பில் பணிபுரிபவர்களென்றும், பொங்கல் விடுமுறைக்காக கிராமத்திற்கு வருகைதந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொற்றாளர்கள் கோணக்கலை...

மகர ராசி நேயர்களே அலுவலக பணிகளில் இன்று கூடுதல் கவனம் தேவை..!

மேஷம் - மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான இன்று முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு...

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

Developed by: SEOGlitz