யுத்தவெற்றியின் 11ஆம் ஆண்டை நினைவு கூரும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகள் நாளை இடம்பெற உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தினூடாக இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிரான முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தினை வெற்றி கொண்ட 11 வருட பூர்த்தியை நினைவுகூரும் நிகழ்வு பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தங்கள் உயிரை பணயம் வைத்து போராடிய போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை மாலை 4 மணிக்கு இடம்பெற உள்ள இந்த நிகழ்வை, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.