மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிணறுகளில் திடீரென நீர் வற்றியமை தொடர்பில் இடர்முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு

- Advertisement -

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீரென கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்தமை தொடர்பில் புவிச்சரிதவியல்  அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகள் ஆய்வொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாத்துமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சில கிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவடைந்த நிலையில் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருந்தனர்.

- Advertisement -

எவ்வாறாயினும் இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அது தொடர்பில் புவிசரிதவியல் அளவை பணியம் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது,

மாதாந்தம் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின்  பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கிணறுகளில் நீர் வற்றுவதன் ஊடாக சுனாமி அனர்த்தம் ஏற்படப் போவதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கிணறுகளின் நீர் திடீரென குறைவடைவதற்கான காரணம் குறித்து புவி சரிதவியல் அளவை பணியகத்தின் ஆய்வின் பின்னரே உறுதியாக கூற முடியும் என இடர்முகாமைத்துவ நிலையத்தின்  பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...