மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 98 பேர் விடுவிப்பு!

- Advertisement -

பலாலி விமானப்படை  தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து மேலும் 98 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவ 98 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துகொண்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 6 மாத குழந்தை உட்பட 10 சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த  98 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 22 நாட்களாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முழுமையாக நிறைவு செய்துகொண்ட 98 பேருக்கும்  தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டதற்கான சான்றிதழும் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

சச்சின் டெண்டுல்கர் மகனுக்காக என்ன செய்தார் தெரியுமா!

உலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் Summer time.. And who doesn’t...

ராஜ நாகத்தை குழந்தை போல குளிர்பாட்டும் இளைஞன்: காணொளி உள்ளே!

இந்தியாவில் அதிக விசத்தன்மைக்கொண்ட ராஜ நாகம் ஒன்றை குழந்தையை போல குளிர்ப்பாட்டி விடும் இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த காணொளியை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் One great survival technique...

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 15 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக கொரோனா தொற்றிலிருந்து...

திருநீறு அணிவதன் நோக்கம் !

இந்துக்களின் மகிமை சொல்லும் விடயங்களில் விபூதியும் ஒன்றாகும். இதனை பகவத்கீதையில் யோகம் என்று புகழ்கிறது. நோய் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகவும் திருநிறு காணப்படுகிறது இதனையே மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரம் எடுத்துக்காட்டுகிறது. விபுதியை வடக்கு அல்லது...