மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தொள்ளாயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில்  11 பேர் அடையாளங் காணப்பட்டதையடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின்  தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, இறுதியாக அடையாளங் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் எனவும், ஏனைய ஒருவர் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், 424 பேர்  தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இதுவரை 559 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 44 ஆயிரத்து 391 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்!

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும்,...

Developed by: SEOGlitz