நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இடர் முகாமைத்துவ நிலையம் வெளியியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிக பாதிப்புகள்ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 178 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 253 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 425 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, வட மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பொலன்னறுவை மற்றும் அனுதாரபுர மாவட்டங்களில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, வட மாகாணத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, வட மாகாகணத்தின் முல்லைதீவு மாவட்டத்தில் எட்டு பேரும், வவுனியா மாவட்டத்தில் 37 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 95 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது