மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் தேவை இல்லை என்கிறார் ஜனாதிபதி

- Advertisement -

அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய  வேண்டிய தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், அரச நிறுவனங்கள் அரசியல் செய்வதை விடுத்து, நிறுவனங்களை முன்னேற்றும் செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கமைய, நிறுவனங்களின் ஊடாக வருமானம் ஈட்ட வேண்டும் எனவும்,  வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

மக்கள் சிரமப்பட்டு உழைக்கும்  வருமானத்தின் மூலமே அரச நிறுவனங்கள் இயங்குவதாகவும், இதனால்  நிறுவனங்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகள் பொதுமக்கள் நலன் பேணல் சேவைகள் என்பதால் வருமானம் ஈட்டுவதை  எதிர்பார்க்கவில்லை எனவும்,  ஏனைய நிறுவனங்கள் தமது பராமரிப்பு மற்றும் ஊழியர் மேம்பாட்டிற்கு தேவையான வருமானங்களை தாமே ஈட்டிக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று மாலை வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான மற்றுமொரு அறிக்கை சமர்ப்பிப்பு!

கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND கப்பல் தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழாமின்...

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது!

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளதையடுத்து  இன்று மாலை முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. கினிகத்தேன...

பொதுமயானத்தில் தீவிபத்து : ஏழு  பேர் படுகாயம்!

கொழும்பு கொட்டிகஹாவத்தை பொதுமயான தகனசாலையில் எரிவாயு வெடித்ததில் ஏழு  பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம்...

Developed by: SEOGlitz