மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் அணி..!

- Advertisement -

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட்டுகளினால் வீழ்த்தியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

- Advertisement -

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் Chris Lynn 49 ஓட்டங்களையும், Suryakumar Yadav 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணி சார்பில் AB de Villiers 48 ஓட்டங்களையும், Glenn Maxwell 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக Harshal Patel தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், Chennai Super Kings மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz