தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில், பாகிஸ்தான் வீரர் Fakhar Zaman ஐ Quinton de Kock சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழக்கச் செய்தமை தொடர்பில், MCC எனப்படும் Marylebone கிரிக்கெட் கழகம் கருத்து வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தை அடித்த பின்னர் அவருக்கு இடையூறு விளைவிப்பது சட்டத்தின் அடிப்படையில் பொருத்தமற்றது என, MCC தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு, ஆட்டமிழப்பை ரத்து செய்தல் மற்றும் மேலதிக ஓட்டங்களை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான தீர்மானங்கள் கள நடுவரின் தீர்மானத்துக்கு உட்பட்டது எனவும், MCC எனப்படும் Marylebone கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது.