இந்த ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டாதென வடகொரியா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தமது நாட்டின் விளையாட்டு வீரர்களை பாதுக்காக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜீலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை தவிர்க்கும் முதல் நாடாக வடகொரியா பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.