தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பில், Temba Bavuma 92 ஓட்டங்களையும், Quinton de Kock 80 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
341 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, சற்று முன்னர் வரை 7 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது