மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்: சமநிலையில் நிறைவடைந்த கிரிக்கட் தொடர்!

- Advertisement -

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நோர்த் சவுண்டில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததையடுத்தே டெஸ்ட் தொடர் சம நிலையில் நிறைவடைந்தது.

- Advertisement -

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்ஸில் 354 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் போது மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அணித் தலைவர் கிரைக் பரத்வைட் சதம் பெற்றதுடன் பந்து வீச்சில் இலங்கை அணிசார்பில் சுரங்க லக்மால் 04 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில் இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 258 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தமது இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 04 விக்கட்டுக்களை இழந்து  280 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

வெற்றிக்காக 377 ஓட்டங்களை பெறுவதற்கு களமிறங்கிய இலங்கை அணி போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நிறைவடைகையில் 02 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில் போட்டியின் நாயகனாக கிரைக் பரத்வைட் தெரிவானதுடன் தொடரின் நாயகனாக 11 விக்கட்டுக்களை வீழ்த்திய சுரங்க லக்மால் தெரிவானார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz