மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுவன் சொய்சாவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நுவன் சொய்சாவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியமைக்காகவே அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற T10 கிரிக்கெட் தொடரில் ‘டீம் ஶ்ரீ லங்கா’வின் பயிற்சியாளராக நுவன் சொய்சா செயற்பட்டிருந்தார்.

இதன்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நுவன் சொய்சா மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நுவன் சொய்சாவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு 6 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz