மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 விக்கெட்டுக்களினால் இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!

- Advertisement -

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்தியாவின் Antigua விலுள்ள நோர்த் சவுண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

- Advertisement -

இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இலங்கை அணிசார்பில் தனுஷ்க குணதிலக 96 ஓட்டங்களையும், தினேஷ் சண்டிமால் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், மேற்கிந்திய அணிகள் சார்பில் jason mohammed 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இதன்படி, 274 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49 தசம் 4 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியலக்கை கடந்தனர்.

இந்தநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் முதலாவது விக்கெட் இணைப்பாட்டமாக Elwin Lewis மற்றும் Shai Hope ஆகியோர் 192 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை இந்த போட்டியின் விசேட அம்சமாகும்.

மேற்கிந்திய திவுகள் அணி சார்பில் அதிக பட்சமாக Elwin Lewis 103 ஓட்டங்களையும், Shai Hope 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணிசார்பில் அதிக பட்சமாக திசர பெரேரா 2 விக்கெட்க்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த போட்டியின் நாயகனாக மேற்கிந்திய திவுகள் அணி சார்பில் சதம்பெற்ற Elwin Lewis தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை 2க்கு பூச்சியம் என்ற வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz