பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடர் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அணி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போது, இந்த தொடரில் பங்குபற்றியுள்ளவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்திற் கொண்டு, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உடனடி நடவடிக்கையாக, இந்த தொடரில் பங்குபற்றியுள்ளவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு மீள PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.