இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் Pathum Nissanka 39 ஓட்டங்களையும், Niroshan Dickwella 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
132 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 13 தசம் 1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில், Kieron Pollard 38 ஓட்டங்களையும், Evin Lewis 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய Kieron Pollard தெரிவு செய்யப்பட்டார்.